இணை - அமைச்சர் பதவியில் இருந்து எல்.முருகன் ராஜினாமா செய்ததற்கு காரணம் பாலிவுட் நடிகையா..? - Seithipunal
Seithipunal


மத்திய செய்தி ஒபிபரப்புத்துறை இணை - அமைச்சர் எல்.முருகன் திடீரெனப் தனது பதவி ராஜினாமா செய்திட்டு, மாநில அரசியலில் கவனம் செலுத்த போவதாக அறிவித்தார். வரும் ஏப்ரல் 2030 வரை அவரது எம்பி பதவிக்காலம் இருந்தும் அதையும் அவர் ராஜினாமா செய்தமை பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், காரணம் எதுவும் இன்றி எல்.முருகன் ராஜினாமா செய்திருப்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் அளித்த புகார் காரணமாகவே முருகன் ராஜினமா செய்ததாக தற்போது ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பாலிவுட் நட்சத்திரம் ஒருவருக்கு அனுப்பப்பட்ட சில செய்திகளே முருகனின் வெளியேற்றத்திற்குக் காரணமாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் ஒருவர், தனக்கு வந்த பொருத்தமற்ற செய்திகள் குறித்து பிரதமர் மோடி அரசின் உயர் அதிகாரி ஒருவரிடம் புகார் அளித்ததாகவும், அந்த அதிகாரி உடனடியாக இந்த விவகாரத்தை ஆளும் கட்சியின் முக்கியத் தலைவர்களிடம் கொண்டு சேர்த்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் பதவி மற்றும் மாநிலங்களவை எம்பி பதவி ஆகிய இரண்டில் இருந்தும் விலக முருகனுக்கு உத்தரவிடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியின் ஒரு பிரபல ஆங்கில நாளேட்டில் வெளியான இந்த செய்தி, முன்னாள் அமைச்சர் முருகனின் விலகல் மர்மத்தை விளக்க முயற்சித்துள்ளது. எனினும், ரகசியம் இன்னும் முழுமையாக தெரியவில்லை. இதே  நேரத்தில் தமிழகத்தில் பல சமூக வலைத்தளங்களில் நடிகை மீனாவுடன் இணைத்து பல செய்திகளை நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையின் மூன்றாவது ராஜினாமாவாக  இணை - அமைச்சர் முருகனின் விலகல் அமைந்துள்ளது. இதற்குமுன், ஜார்ஜ் குரியன் மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். இதற்கு இருவரது எம்பி பதவிக்காலம் முடிவடைந்தது காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is a Bollywood actress the reason behind L Murugan resignation from his post as Minister of State


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->