IPL மெகா ஏலம் எப்போது? - வெளியானது அதிகார்பூர்வத் தகவல்.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தி வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன், வருகின்ற மார்ச் 22ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. இதற்கிடையே ஐபிஎல் தொடரில் வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடப்பது வழக்கம். ஒரு அணியின் வெற்றி, தோல்வி ஐபிஎல் மெகா ஏலத்தின் மூலமாக 50% நிர்ணயிக்கப்படுவதாக கூறுவார்கள்.

இந்த நிலையில், பிசிசிஐ பொருளாளர் அருண் தோமல், அடுத்த வருடம் ஐபிஎல் மெகா ஏலம் நடக்குமா? எத்தனை வீரர்களை ஒரு அணி தக்க வைக்கலாம்? என்பது குறித்தான முக்கிய எதிர்பார்ப்பு மிக்க கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளித்து இருக்கிறார். அதன் விவரம் பின்வருமாறு:-  “நிச்சயமாக நாங்கள் அடுத்த வருடம் மெகா ஏலத்தை நடத்துவோம். ஒவ்வொரு அணியும் மூன்று முதல் நான்கு வீரர்களை தக்க வைக்கலாம். இதன் மூலமாக புதிய அணிகள் உருவாக்கப்படும். இது மேலும் சுவாரசியமாக ஐபிஎல் தொடரை மாற்றும்.

இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஐபிஎல் தொடர் மூலமாக புதிய திறமைகளை நாங்கள் கொண்டு வந்ததை போலவே, உதாரணமாக ஆப்கானிஸ்தான் போன்ற நாட்டிலிருந்து கிரிக்கெட் திறமைகளை கொண்டு வந்ததை போலவே, எப்பொழுதும் கொண்டு வருவோம். இதனால் எல்லா கிரிக்கெட் நாடுகளும் பலனடைந்து இருக்கின்றன.

இந்த முறை சவால் என்னவென்றால், ஜூன் முதல் வாரத்தில் டி20 உலகக் கோப்பை நடக்கிறது. எனவே நாங்கள் ஐபிஎல் தொடரை மே 25 அல்லது 26 ஆம் தேதிக்குள் முடித்தாக வேண்டும். அப்பொழுதுதான் இந்திய அணி அமெரிக்கா போன்ற ஒரு புதிய சூழ்நிலையில் சென்று தங்கி பழகி விளையாடுவதற்கு வசதியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL Mega Auction date announce


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->