இந்தியப் பணக்காரர்கள் பட்டியல் 2025: முதலிடத்தில் யார்..?
Indias Richest People List 2025
2025-ஆம் ஆண்டுக்கான இந்தியாவில் அதிக சொத்துக்களை வைத்துள்ள 100 பணக்காரர்களின் பட்டியலை ஹுருன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் முதலிடத்தில் உள்ளது. அவர்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 9.55 லட்சம் கோடியாகும்.
கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அதானி, இந்த ஆண்டு, 8.15 லட்சம் கோடியுடன், 02-வது இந்த இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.03 வது இடத்தில் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா ரூ.2.84 கோடியுடன் உள்ளார்.
அதேபோல, இந்தப் பணக்காரர்கள் பட்டியலில் பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதோடு, 56-இல் இருந்த கோடீஸ்வரர்களின் எண்னிக்கை தற்போது 358 ஆக உயர்ந்துள்ளது. இதில், 1687 பேர், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

100 பேர் கொண்ட பட்டியலில் டாப் 10-இல் இடம் பிடித்துள்ளவர்கள்:-
01.முகேஷ் அம்பானி -9.55 லட்சம் கோடி ரூபாய்
02.கவுதம் அதானி- 8.14 லட்சம் கோடி ரூபாய்
03.ரோஷினி நாடார் - 2.84 லட்சம் கோடி ரூபாய்
04.சைரஸ் பூனாவாலா - 2.46 லட்சம் கோடி ரூபாய்
05.குமார் மங்கலம் பிர்லா - 2.32 லட்சம் கோடி ரூபாய்
06.நீரஜ் பஜாஜ் - 2.32 லட்சம் கோடி ரூபாய்
07.திலீப் சங்வி - 2.30 லட்சம் கோடி ரூபாய்
08.அசீம் பிரேம்ஜி - 2.21 லட்சம் கோடி ரூபாய்
09.கோபிசந்த் ஹிந்துஜா - 1.85 லட்சம் கோடி ரூபாய்
10.ராதாகிஷன் டமானி - 1.82 லட்சம் கோடி ரூபாய்
இந்தியாவில் கோடீஸ்வரர்களின் அதிவேக வளர்ச்சியை இந்தப் பட்டியல் வெளிப்படுத்துகிறது.
English Summary
Indias Richest People List 2025