ஒருவேளை பட்டினி கிடைக்கும் மக்கள்... கொரோனா ஊரடங்கு எதிரொலி.. ஆய்வில் அதிர்ச்சி..!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், கிராமப்புறத்தில் எப்படி ஊரடங்கை சமாளித்து வருகின்றனர் என்பது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்காக ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் மே மாதம் 2 ஆம் தேதி வரை 12 மாநிலத்தில் இருக்கும் 47 மாவட்டங்களில் சுமார் 5162 வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இந்தியாவின் மத்திய பிரதேசம், ஜார்கண்ட், உத்திரபிரதேசம், ராஜஸ்தான், ஒடிஷா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, குஜராத், அசாம், பீகார் மற்றும் கர்நாடக மாநிலத்திலும் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் கிராமப்புறத்தில் பாதிநபர்கள் 50 விழுக்காட்டிற்கும் குறைவான உணவுகளை சாப்பிட்டது தெரியவந்துள்ளது. மேலும், நெருக்கடியை சமாளிக்க குறைந்தளவு சாப்பிடுவதும் உறுதியானது.

பாதிக்கும் மேற்பட்ட நபர்கள் அங்குள்ள பருவத்திற்கான விதைகளும் இல்லாமல், பயிர்கடனை நாடியிருக்கும் சூழல் தெரியவந்தது. 68 விழுக்காடு குடும்ப நபர்கள் தங்களின் உணவு பொருட்களை குறைந்துள்ள நிலையில், 50 விழுக்காடு குடும்பத்தினர் ஒருவேளை உணவை மறக்க துவங்கியுள்ளனர். உணவு தானியத்தையும் கடனாக பெற்று வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக வருமானம் பாதிக்கும் அதிகமாக குறைந்துள்ள சூழலில், 22 விழுக்காடு குடும்பங்கள் பணக்காரனை நபர்களிடமிருந்தும், 16 விழுக்காடு நபர்கள் பணத்தை கடன் கொடுக்கும் நபர்களிடம் இருந்து கடன் வாங்கியுள்ளனர். 22 விழுக்காடு நபர்கள் கால்நடைகளை விற்பனை செய்து பணத்தை ஏற்பாடு செய்துள்ளார். 14 விழுக்காடு நபர்கள் வீட்டு பொருட்களை அடமானம் செய்துள்ளனர். பெண்களுக்கு அதிக பணிச்சுமை அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India village peoples reduce eating food due to corona amid


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->