ஏழாவது முறையாக உதவ வரும் டிரம்ப்.. உதறி தள்ளும் இந்தியா.! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் தலையீட்டை அனுமதிக்க முடியாது என இந்தியா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஸ்விட்சர்லாந்து டாவோசில் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்துப் பேசிய அப்போது காஷ்மீர் பிரச்சினையை பற்றி டிரம்ப்பிடம் பேசினார்.

அப்போது காஷ்மீர் பிரச்சனையில் ஏதோ ஒருவகையில் உதவ விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஏற்கனவே இதற்கு முன் டிரம்ப்பின் சமரச முயற்சியை இந்தியா பல முறை நிராகரித்துள்ளது. தற்போது டிரம்ப் ஏழாவது முறையாக காஷ்மீர் பிரச்சனையில் உதவ விரும்புவதாக தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

டிரம்ப்பின் இந்த முடிவை இந்தியா மீண்டும் நிராகரித்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவதாக எந்த ஒரு நாடும் தலையிடக்கூடாது என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india rejects trump request


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->