தவறான செய்திகளை எதிர்த்து இந்தியா நிராகரிப்பு..! பாகிஸ்தான் உண்மையான உதவி நடவடிக்கையில் கலந்த பொய்...!
India rejects fake news Lies mixed Pakistans genuine aid operation
நவம்பர் மாதம் தொடங்கி இலங்கையை தொடர்ச்சியாக சூழ்ந்த கனமழைக்கு சமீபத்தில் வடக்குப் பங்கில் உருவான டிட்வா புயல் கூட்டிணைந்து, நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கையை கறுக்கி விட்டது.
வீடுகள், குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், 330க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது; 400க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.இந்த பேரிடர் பாதிப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்க இந்தியா “ஆபரேசன் சாகர்பந்து” என்ற பேரிடர் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
2 இந்திய கடற்படைக் கப்பல்கள் 9.5 டன் நிவாரணப் பொருட்களுடன் இலங்கைக்கு நேரடியாக புறப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து இந்திய விமானப்படையின் 3 விமானங்கள் 31.5 டன் பொருட்கள், மேலும் சுகன்யா கப்பலில் 12 டன் பொருட்கள் கொண்டு சென்றன.
மொத்தம் 53 டன் நிவாரணப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.மேலும், ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பல் மற்றும் எம்.ஐ.-17 ஹெலிகாப்டர்கள் இலங்கை விமான படையுடன் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
புயல் பாதிப்புகளை பார்த்து பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளும் நிவாரண உதவிக்கு முன்வந்துள்ளன.எனினும், பாகிஸ்தான் தனது விமானங்களை அனுப்ப இந்திய வான் பரப்பை பயன்படுத்த அனுமதிக்க கோரியதை இந்தியா குறுகிய காலத்திற்குள் பரிசீலித்து, 4 மணிநேரத்தில் ஒப்புதல் வழங்கியது.
இந்தியா, அடிப்படையற்ற மற்றும் தவறான செய்திகளை பரப்பும் பாகிஸ்தான் ஊடகங்கள் முயற்சிகளை நிராகரித்து, உண்மையான உதவிப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.
English Summary
India rejects fake news Lies mixed Pakistans genuine aid operation