இந்தியாவில் எகிறும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு.! பல மாநிலங்களில் முழு ஊரடங்கு.!  - Seithipunal
Seithipunal


உலகத்தை அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதன் தாக்கமே நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது.

இதன்காரணமாக உலக நாடுகள் பலவும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தி வருகின்றன. முக்கியமாக விமான சேவைகள் பலவும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இதில் நம் இந்தியாவை ஏற்கனவே ஒருநாள் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துவிட்ட நிலையில், ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 3,623 ஆக அதிகரித்துள்ளது.

3,071 ஆக இருந்த ஒமைக்ரான் பாதிப்பு நேற்றைய ஒரே நாளில் 3,263ஆக அதிகரித்துள்ளது.

அதே சமயத்தில் ஒமைக்ரான் பதிப்பில் இருந்து 1,409 பேர் குணமடைந்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளது.

தமிழகம், கர்நாடக உள்ளிட்ட பல மாநிலங்களில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india omicron update jan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->