10 ஆயிரம் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் - அதிரடி காட்டும் வருமான வரித்துறை.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், மாத ஊதியம் பெறும் தனி நபர்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் வருமானம் மற்றும் செலவு கணக்கை, ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்ய வேண்டும். 

அப்படி தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளை, தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை இயக்குநரக அதிகாரிகள், இணையதளம் மூலம் ஆண்டறிக்கைகளை ஆய்வு செய்தனர்.

அதில், பல்வேறு முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளன. அதே போல், பல நிறுவனங்கள் வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்தாலும், அதற்கான ஆண்டறிக்கையை தாக்கல் செய்யாததும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, பத்தாயிரம் தொழில் நிறுவனங்களுக்கு, வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், 600க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் மற்றும் நிதி நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வருமான வரித்துறையின் நோட்டீஸ் பெற்ற நிறுவனங்கள், அதற்கு உரிய காலக்கெடுவுக்குள் பதில் அளித்து, அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

income tax department notice send to ten thousand companies


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->