ஒரேநாள் இரவில் மின்னல் தாக்கி 32 பேர் உயிரிழந்த பரிதாபம்..! அடுத்தடுத்து நேர்ந்த சோகம்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தற்போது வடகிழக்கு பருவமழையானது தீவிரமாக பெய்து வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு பருவமழைக்கு கேரளாவை அடுத்தடுத்துள்ள மாநிலங்களான மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாநிலங்கள் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாநிலங்கள் நல்ல மழையை கண்டுள்ளது. 

இதனால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கி நேபாளம் மற்றும் பிரம்மபுத்திரா பகுதியில் உள்ள மக்கள் பரிதாபமாக பலியாகினர். சிலர் தங்களின் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதனை போன்று மும்பையிலும் வெள்ளத்தின் பிடியில் மக்கள் சிக்கியிருந்தனர். மேலும்., கேரளாவில் மூன்று நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

thunder, thunder storm, rain, tough climate,

இந்த நிலையில்., உத்திரப்பிரேதேசம் மாநிலத்தில் பருமழையானது தீவிரமாக இருந்து வரும் நிலையில்., கனமழையானது அதிகளவு பெய்து வருகிறது. நேற்று அம்மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் திடீரென மின்னல்கள் சீறிப்பாய்ந்த நிலையில் கான்பூர்., பதேக்ப்பூர் பகுதியில் அடுத்தடுத்து 14 பேரும்., ஜான்சியில் சுமார் 5 பேரும்., ஜாலவின் பகுதியில் சுமார் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதுமட்டுமல்லாது ஹமிர்பூரில் 3 பேரும்., காசிப்பூர் பகுதியில் 2 பேரும்., பிற பகுதிகளில் மொத்தமாக 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுமட்டுமல்லாது சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மின்னல் தாக்கியதில் உயிரில்லாத குடும்பத்தாருக்கு ரூ.4 இலட்சம் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in utterpredesh 32 peoples died thunder lighting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->