பாலியல் பலாத்காரம் தொடர்பான புகாரை வாபஸ் பெற மறுத்த பெண்.. ஆசிட்வீசிய கொடூரம்.. உயிருக்கு போராடும் பெண்மணி.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான அநீதிகளை பொருத்தவரை அது இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளையும் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆழ்த்தியுள்ளது. 

மேலும், இந்தியாவில் எடுக்கப்பட்ட குற்றப் பத்திரிக்கைகளின் முடிவின்படி, ஒரு நாள் ஒன்றுக்கு 94 பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றங்கள் காவல் நிலையத்தில் புகாரளிக்க படுவதாகவும் தெரியவந்துள்ளது. இதனைப்போன்று பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை, கொலை போன்ற சம்பவங்களும் நாள் ஒன்றுக்கு 80 க்கும் அதிகமாக நடைபெறுகிறது. 

sexual harassment, sexual abuse, sexual torture, rapped,

இந்த நிலையில், பெண்களை ஒருதலைபட்சமாக காதலிப்பது, நாடகக்காதல் செய்வது போன்ற பிரச்சனையால் பல பெண்களின் வாழ்க்கையும் பெரும் கேள்விக்குறிக்கு உள்ளாகும் சோகமும் அரங்கேறி வருகிறது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பெண் ஒருவரின் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் இருக்கும் பெண் ஒருவர் பாலியல் பலாத்கார பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்த நிலையில், புகாரை வாபஸ் பெறக்கோரி பெண்ணின் மீது ஆசிட் வீசிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Mumbai girl acid attack due to withdraw about sexual abuse complaint


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->