முட்டளவு பனி.. கர்ப்பிணிக்கு பிரசவ வலி.. ஓடிவந்த இந்திய இராணுவம்.. வெளியான வீடியோ.. குவியும் பாராட்டுக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் வசித்து வந்த பெண்மணியின் பெயர் ஷிமிமா. இவர் தற்போது கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

இந்த நேரத்தில், இவர்கள் இருந்த பகுதியில் பனி முற்றிலும் சூழ்ந்து, போக்குவரத்து வசதி துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில், இதனை அறிந்த இராணுவ வீரர்கள் 100 பேர் சேர்ந்து பெண்ணை தூக்கி சென்றுள்ளனர். 

இதனை கண்ட பொதுமக்களும் உதவிக்காக சுமார் 30 பேர் உடன் சென்ற நிலையில், ஜம்மு நகரில் இருந்து நான்கு மணிநேரம் சுமந்து சென்று பெண்ணை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

தற்போது பிரசவத்திற்கு பின்னர் தாயும் - சேயும் நலமாக உள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியது. இந்த விஷயத்தை கவனித்த இந்திய பிரதமர் மோடி இராணுவத்தினருக்கும், பிறந்த குழந்தைக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பதிவு செய்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Kashmir pregnant girl safety reached hospital help by Indian army


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal