மிதக்கும் கர்நாடகம்..! பதறும் மக்கள்... பலியான உயிர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கனமழையின் காரணமாக சுமார் 15 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில்., வெல்ல நிவாரண பணிகளுக்கு நிதிஉதவி வேண்டி கர்நாடக அரசு கோரிக்கை வைத்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையானது கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கொட்டித்தீர்த்த நிலையில்., வடகர்நாடக பகுதியில் கனமழையானது பெய்தது. இதுமட்டுமல்லாது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டதை அடுத்து., கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு அதிகளவு ஏற்பட்டது. 

karnadaga flood,

இதனால் சுமார் 80 க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக மரணடைந்த நிலையில்., இலட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தனர். வடகர்நாடக பகுதியில் இருந்த மக்கள் தற்போது மெல்ல மெல்ல மீண்டு வந்த நிலையில்., மீண்டும் கனமழை பெய்யத் துவங்கியது.

இதனையடுத்து அங்குள்ள பெலகாவி., பாகல்கோட்டை., விஜயாப்புரா., யாதகிரி., கதக்., தார்வார்., சித்ரதுர்கா., ராய்ச்சூர் மற்றும் பல்லாரி போன்ற வடகர்நாடக மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில்., மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் 12 பேர் மரணமடைந்த நிலையில்., போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karnadaga flood peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->