டிக் டாக் காதலனை கரம்பிடிக்க கழுத்தில் பிளேடு வைத்த பெண்... இறுதியில் அரங்கேறிய பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள ஆந்திரப்பிரதேசம் கோதாவரி மாவட்டத்தை சார்ந்தவர் வீரபாபு (வயது 20). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் ஜூபிலி பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்து வந்துள்ளார்.  

இந்நிலையில், அங்குள்ள பெல்லிங்மாம் பள்ளி பகுதியில் உள்ள அழகுக்கடையில் பணியாற்றி வந்த 20 வயதுடைய இளம்பெண்ணிற்கும், வீரபாபுவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

drama love,

இவர்கள் இருவருக்கும் டிக் டாக் செயலியின் மூலமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இவர்களின் பழக்கம் பின்னாளில் காதலாக மாறியுள்ளது. 

காதலர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து பேசிவந்த நிலையில், திருமண ஆசையும் காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது இளம்பெண் திருமணம் செய்ய வற்புறுத்தவே, வீரபாபு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். 

காதலன் தன்னை ஏமாற்றிவிடுவான் என்ற அச்சத்தில், அங்குள்ள காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்த நிலையில், காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணைக்கு பின்னர் வீரபாபு திருமணம் செய்ய மறுப்பு தெரிவிப்பது போல பேசியுள்ளதாக தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்மணி, காவல் நிலையத்தில் வைத்தே தான் வைத்திருந்த பிளேடை வைத்து கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் பெண்ணை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், காவல் நிலையத்திற்கு உள்ளேயே பெண் தற்கொலைக்கு முயற்சி செய்தது அதிர்வலையை பதிவு செய்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in andra predesh girl suicide attempt due to tic tok love


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->