'அவரை நான் தான் திருமணம் செய்ய வேண்டும்'...! - புதுப்பெண் மீது ஆசிட் வீசிய அதிர்ச்சி சம்பவம்...!
I want to marry him Shocking incident acid being thrown young woman
டெல்லி கோகல்புரி பகுதியில் நடைபெற இருந்த ஒரு மகிழ்ச்சியான திருமணம், சில நிமிடங்களில் கொடூர காட்சியாக மாறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஷப்னம் (21) என்ற இளம்பெண்ணுக்கு, அதே பகுதியில் வசிக்கும் இளைஞருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வரும் 19ஆம் தேதி நடைபெறவிருந்தது. இதனை முன்னிட்டு, அவரது வீட்டில் நேற்று திருமண முன்சடங்குகள் கோலாகலமாக நடைபெற்று கொண்டிருந்தன.

மணமகள் ஷப்னம் அழகாக அலங்கரிக்கப்பட்டு அமர்ந்திருந்த நிலையில், அண்டை வீட்டுப் பெண்கள் மெகந்தி உள்ளிட்ட அலங்கார நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். சந்தோஷம் நிறைந்த அந்த சூழ்நிலையே திடீரென சோகமாக மாறியது. அப்பொழுது அங்கு வந்திருந்த குலிஸ்தா (26) என்ற இளம்பெண், எச்சரிக்கையின்றி ஷப்னத்தின் முகத்தை குறிவைத்து ஆசிட் வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடந்த உடனே அங்கிருந்து தப்பிச் சென்ற அவர், அப்பகுதி மக்களை பதற்றத்தில் ஆழ்த்தினார்.இந்த தாக்குதலில் கடுமையாக காயமடைந்த ஷப்னம், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
திருமண வீட்டில் ஒலித்த சிரிப்புகள் சில நொடிகளில் அழுகுரலாக மாறியதால், குடும்பத்தினர் பெரும் துயரத்தில் உள்ளனர்.இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், கோகல்புரி காவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்து குலிஸ்தாவை கைது செய்தனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில், ஷப்னம் திருமணம் செய்ய இருந்த இளைஞர் தன் முன்னாள் காதலன் என்பதும், அவர் மற்றொருவரை திருமணம் செய்யவிட முடியாத பொறாமை மற்றும் கோபத்தின் காரணமாகவே இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதாக குலிஸ்தா ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் விரோதம், பொறாமை, பழிவாங்கும் எண்ணம் ஆகியவை இணைந்தால் எவ்வளவு பயங்கரமான விளைவுகளை உருவாக்க முடியும் என்பதற்கான இன்னொரு அதிர்ச்சி எடுத்துக்காட்டாக இது மாறியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
I want to marry him Shocking incident acid being thrown young woman