மனித முகம் கொண்ட விசித்திர ஆடு... கிராம மக்கள் கூறும் காரணம்..! வைரலாகும் வீடியோ..!  - Seithipunal
Seithipunal


லகமெங்கும் நிறைந்திருக்கும் விநோதங்களை நாம் காண முடியாமல் போனாலும், நாம் கண் முன்னே நடக்கும் சில அதிசயங்களை பார்க்கும் போது தான், நம் கண்ணை நாமே நம்ப முடியாமல் போகிறது. 

அந்த வகையில், இந்தியாவில் ஒரு ஆடு ஒன்று தட்டையான முக வடிவில், சற்று விசித்திரமான மனிதனைப் போன்று கண்களுடன் பிறந்துள்ளது. இந்த ஆடு பிறந்த பிறகு, அதன் உருவத்தை கண்ட அப்பகுதி மக்கள், அந்த ஆட்டினை கடவுளின் அவதாரமாக நினைத்து வணங்கி வருகிறார்கள். 

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் உள்ள நிமோடியா என்னும் கிராமத்தில் மனிதனைப் போன்ற கண்களும் வாயும் கொண்ட அந்த இளம் ஆடு, சமீபத்தில் தான் பிறந்திருக்கிறது. அதன் உரிமையாளர் முகேஷ்ஜி பிரஜாபப் தனது குடிசைக்குள் ஒரு விசித்திரமான முகத்துடன் பிறந்த ஆட்டின் வீடியோவை தற்போது வெளியிட்டிருக்கிறார். 

மேலும், அந்த ஆடு ஏதேனும் குறைபாடு காரணமாக இது போன்ற முகச் சிதைவை சந்தித்திருக்கலாம். அதன் காரணமாக நெற்றியில் கண் உருவாகியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனாலும் அந்த பகுதி மக்கள் வித்யாசமாக பிறந்த ஆடு, கடவுளின் அவதாரமாக மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

human face goat in rajasthan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->