நாடக காதலன்களுக்கு ஆப்பு! உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


ஒரு பெண்ணை பயமுறுத்தி, திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி (நாடக காதல்), பாலியல் உறவு வைத்துக் கொண்டாலும், சட்டத்தின்படி அவர் பாலில் வன்கொடுமை செய்யப்பட்டதாகவே கருதப்படும் என்று, அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு, பெண் ஒருவர் சுயநினைவு இல்லாத நிலையில், அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பெண் அளித்த புகாரின்படி, அந்த பெண்ணை ஏமாற்றி, மிரட்டல் மூலமும் இந்த பாலியல் உறவு நடந்துள்ளது.

ஒரு பெண்ணின் அனுமதியுடன் இருவருக்கும் இடையே பாலியல் உறவு ஏற்பட்டாலும், அந்த பெண்ணை பயமுறுத்தி அல்லது தவறாக வழிநடத்தி ஏமாற்றி பாலியல் உறவு கொண்டால், அது பாலியல் வன்கொடுமையாகவே சட்டப்பிரிவு 376 இன் கீழ் கருதப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, இந்த வழக்கை தொடர்ந்து விசாரணை செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

High Court Judgement Drama Lovers


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->