மோர்பி பாலம் விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு..!! நீதிமன்றத்தில் குஜராத் அரசு உறுதி..!! - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் 30ம் தேதி குஜராத் மாநிலத்தில் மூர்த்தி மாவட்டத்தில் ஓடும் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தொங்கு நடைபாலம் அருந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் 4 லட்சம் ரூபாயும் மத்திய அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதிகள் உயிரிழந்தோருக்கான இழப்பீட்டை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்குமாறு ஆலோசனை வழங்கினர். இதுகுறித்து மாநில அரசிடம் ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியிருந்தார். 

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்மோர்பி பாலம் விபத்தில் உயர்ந்தவரின் குடும்பத்தாருக்கு தல 10 லட்சம் ரூபாய் வழங்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. குஜராத் மாநில முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து 8 லட்சம் ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GujaratGovt confirmed Rs10lakh compensation for bridge accident victim


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->