மோடியின் காரில் ஏற முயற்சித்த முதல்வருக்கு ஏற்பட்ட அவமானம்.! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்.!  - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி குஜராத் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த போது, குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேலுக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது. 

விரைவில் குஜராத் மாநிலத்தில் சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து பல நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகின்றார். 

இத்தகைய நிலையில், குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் பிரதமர் நரேந்திர மோடியின் காரில் ஏறுவதற்கு முயற்சித்தார். அப்பொழுது கார் அவரை ஏற்றாமல் புறப்பட்டுவிட்டது. தேசிய பாதுகாப்பு படை வீரர் குஜராத் முதல்வரை தடுத்து நிறுத்தினார். 

இதனை தொடர்ந்து, பாதுகாப்பு வீரர்களுடன் சேர்ந்து குஜராத் முதல்வரும் நடந்து சென்றுள்ளார். இதுபற்றிய வீடியோவை பாரத் ராஷ்டிரிய சமிதி மற்றும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gujarat cm insulted to use modi car


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->