கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்: காரணம் என்ன?  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி, காராமணி பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 2000 மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இந்தப் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு தரமாக இல்லை எனவும் சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி இல்லை எனவும் மாணவர்கள் ஆசிரியர்களிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். 

இருப்பினும் இது தொடர்பாக ஆசிரியர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர்கள் ஆத்திரமடைந்து இன்று வகுப்புகளை புறக்கணித்து பள்ளியில் இருந்து ஊர்வலமாக இந்திரா காந்தி சிலை அருகே வந்தனர். 

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து கல்வித்துறை வளாகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

இது குறித்து தகவல் அறிந்த ஆசிரியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். 

இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அடிப்படை வசதி கோரி மாணவர்கள் கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt School Students Blockade Education Department


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->