மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கியாஸ் சிலிண்டர் விலை உயரும் - மம்தா பானர்ஜி திட்டவட்டம்.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கம், ஜார்கிராம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, பா.ஜ.க மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 1500 அல்லது 2000 வரை உயரும்.

இதனால் நாம் சமையல் செய்வதற்கு பழைய நடைமுறைக்கு மீண்டும் சென்று விறகுகளை சேகரிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம். 

ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்திற்குள் வீடுகளை கட்டி முடிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தேன். 

அதற்குள் அவர்கள் கட்டித் தரவில்லை என்றால் மாநில அரசை மே மாதத்தில் இருந்து வீடுகளை கட்ட தொடங்கும். இளைஞரிடம் 100 நாள் வேலை திட்டத்துக்கான பணம் கிடைத்ததா என கேட்டதற்கு சுமார் ரூ. 30000 வரை கிடைத்ததாக தெரிவித்தார்.

இவரைப் போல கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு வழங்காமல் இருந்த தொகை தான் இது. 59 லட்சம் பேருக்கு நிலுவையில் இருந்த தொகையை செலுத்தி உள்ளோம் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gas cylinder cost increase bjp returns


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->