முகவரி கேட்பது போல் நடித்து வாலிபரை கடத்தி பலாத்காரம் செய்த 4 இளம்பெண்கள்! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தை அடுத்த ஜலந்தரில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்யும் வாலிபர் ஒருவர் இரவில் பணி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவரை நோக்கி வேகமாக வந்த கார் ஒன்றில் 20 வயது மதிக்கத்தக்க நான்கு இளம் பெண்கள் இருந்துள்ளனர். அவரிடம் ஒரு துண்டுச் சீட்டை நீட்டி முகவரி கேட்டுள்ளனர். அப்பொழுது இளம் பெண்கள் அந்த வாலிபர் மீது மயக்க மருந்து ஸ்பிரே அடித்துள்ளனர். 

இதனால் மயங்கி விழுந்த வாலிபரை அந்தப் பெண்கள் காரில் கடத்திச் சென்று மறைவான இடத்தில் கை கால்களை கட்டி போட்டுள்ளனர். பின்னர் நான்கு பெண்களும் இணைந்து மது அருந்தியது மட்டும் இல்லாமல் அந்த வாலிபரையும் மது அருந்த கட்டாயப்படுத்தி உள்ளனர். பின்னர் நான்கு பெண்களும் அவரை மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து அதிகாலை 3 மணி அளவில் அவரது கை மற்றும் கண்களைக் கட்டி அடையாளம் தெரியாத இடத்தில் இறக்கிவிட்டு நான்கு பெண்களும் காரில் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த வாலிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பஞ்சாப் காவல்துறையினர் வாலிபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்தப் பெண்கள் பணக்காரர்கள் போல தெரிந்ததாகவும் நன்றாக ஆங்கிலம் பேசியதாகவும் கூறியுள்ளார். 

அதில் இரண்டு பெண்கள் தன்னிடம் பஞ்சாபி மொழியில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தப்பிச்சென்ற நான்கு இளம் பெண்களையும் போலீசார் தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் தனியாக வந்த வாலிபரை கடத்திச் சென்று இளம்பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பஞ்சாபில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Four Punjabi young girls kidnapped and raped a teenager


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->