ஒடிசா: விடாது துரத்திய வறுமை - 8 மாதக் குழந்தையை ரூ.800-க்கு விற்பனை செய்த தாய்.! - Seithipunal
Seithipunal


ஒடிசா: விடாது துரத்திய வறுமை - 8 மாதக் குழந்தையை ரூ.800-க்கு விற்பனை செய்த தாய்.!

ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ஜா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கராமி முர்மு. பழங்குடியின பெண்ணான இவரது கணவர் முசு தமிழகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அதில் ஒரு குழந்தை பிறந்து எட்டு மாதங்கள் தான் ஆகியுள்ளது. இதற்கிடையே கராமி முர்மு வறுமை காரணமாக இந்தக் குழந்தையை வளர்க்கமுடியாது என்று நினைத்து, குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு அதனை ரூ.800-க்கு விற்பனை செய்துள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்த முசு, புதிதாக பிறந்த இரண்டாவது குழந்தை குறித்துக் கேட்டுள்ளார். அதற்கு, கராமி முர்மு குழந்தை இறந்துவிட்டதாக பொய் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர் முசு சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். 

இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தியதில், புதிதாக பிறந்த பெண்குழந்தையை ரூ.800-க்கு ஒரு குழந்தையில்லாத தம்பதிக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் குழந்தையின் தாய் கராமி முர்மு, அதை வாங்கிய தம்பதி, அதற்கு ஏற்பாடு செய்த நபர்கள் என்று நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples arrested for sale eight month baby in odisa


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->