மீண்டும் வெடித்த விவசாயிகள் போராட்டம்.. அரியானாவில் தீவிரமடையும் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தில் சூரியகாந்தி விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கக்கோரி விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹரியானா மாநிலத்தில் அதிக அளவிலான பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்படுகிறது. அரசு கொள்முதல் செய்யும் சூரியகாந்தி விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கடந்த 6ம் தேதி அய்யனாவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‌ இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இதனை கண்டித்தும் சூரியகாந்தி விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க கோரியும் அரியானாவில் விவசாயிகளில் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சூரியகாந்தி விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி அரியானா மாநிலம் குருசேத்திராவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் டெல்லி - அமிர்தசரஸ் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான விவசாயிகள் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Formers protest in Hariyana


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->