'சரியான நேரம் வரும் வரையில் ராஜினாமா செய்ததற்கான காரணங்கள் ரகசியமாகவே இருக்கும்'; மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸ்..!
Former West Bengal Governor CV Anand Bose says reasons for resignation will remain secret until the right time comes
மேற்கு வங்க ஆளுநராக பதவி வகித்து வந்த சி.வி. ஆனந்த் போஸ், கடந்த 05-ஆம் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் பேசும் பொருளானது. இந்த ராஜினாமா குறித்தான ரகசியங்கள் உரிய நேரத்தில் வெளியே வரும் எனத் போஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 05-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்து, குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினார். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்கள் ஏப்ரல் – மே மாதத்தில் நடக்க இருக்கும் சூழலில், சி.வி. ஆனந்த் போஸின் ராஜினாமா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவரது ராஜினாமாவைத் தொடர்ந்து ஆளுநர்கள் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்து வந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டார். அதேபோல், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பை கேரள ஆளுநராக இருந்து வரும் ஆர்.வி. ஆர்லேகர் கூடுதலாக வகிப்பார் என குடியரசுத் தலைவரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
பதிவிய ராஜினா செய்த நிலையில், இன்று சி.வி. ஆனந்த் போஸ் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் கூறியதாவது:
“நான் மனப்பூர்வமாக எனது ராஜினாமா முடிவை எடுத்துள்ளேன். சரியான நேரம் வரும் வரையில் ராஜினாமா செய்ததற்கான காரணங்கள் ரகசியமாகவே இருக்கும்.
எங்கெல்லாம் நுழைவு என்று ஒன்று இருக்கிறதோ அங்கெல்லாம் வெளியேறும் இடமும் இருக்கிறது. நான் இங்கு ஆளுநராக 1200 நாட்களை நிறைவு செய்துவிட்டேன். அதாவது கிரிக்கெட் மொழியில் சொல்வதென்றால், 12 சதங்கள். வெளியேற இதுவே சரியான நேரம் என நான் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Former West Bengal Governor CV Anand Bose says reasons for resignation will remain secret until the right time comes