முன்னாள் பிரதமருக்கு திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! - Seithipunal
Seithipunal


முன்னாள் பிரதமரும், ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா (வயது 91) பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள அவரது வீட்டில் வசித்து வருகிறார். 

மேலும் வீட்டில் இருந்தபடியே பல்வேறு அரசியல் பணிகளை கவனித்தும் வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று வீட்டில் இருந்தபோது திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டு உடனடியாக மணிப்பால் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லேசாக மூச்சு திணறல் இருப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

மேலும் தேவகவுடாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

former pm deve gowda hospitalised


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->