மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் - Seithipunal
Seithipunal


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக் குழுவின் முன்னாள் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.

புற்றுநோய்க்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொடியேறி பாலகிருஷ்ணன் (68 வயது) சற்றுமுன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

கேரள மாநில சிபிஐ(எம்)இன் பொறுப்பாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், கேரள மாநில உள்துறை அமைச்சராக இருந்தவர். தற்போது தலசேரி எம்.எல்.ஏ ஆக இருக்கிறார்.

கடந்த 2019 தேர்தல் தோல்விக்கு பின் நிர்வாகிகள், தொண்டர்களின் வீடுகளுக்கே சென்று கருத்துக்களை உள் வாங்கியவர், பின்னர் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

கடந்த கேரள சட்டமன்ற தேர்தலில் LDF கூட்டணி வென்று மீண்டும் ஆட்சி அமைக்க உதவியவர்களில் முதன்மையானவர் கொடியேறி பாலகிருஷ்ணன். 

பிடிசி (+2) மாணவராக இருந்தபோதே கல்லூரி யூனியன் சேர்மனாக பதவி வகித்தவர் கொடியேரி பாலகிருஷ்ணன், சிபிஎம்மிலிருந்து எம்.வி.ராகவனின் சிஎம்பிக்கு கேடர் ஓட்டத்தைத் தடுத்தவர், தலைவர்களை சிபிஎம்க்குத் திரும்ப ஊக்குவித்தவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former CPIM Kerala state secretary Kodiyeri Balakrishnan passes away


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->