உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை.! வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்.! - Seithipunal
Seithipunal


உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் தங்களின் படிப்பை தொடர்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக போர் புரிந்து வருகிறது. இந்த போர் தொடங்கிய உடன் அங்கு மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். தங்களின் மருத்துவ அடிப்பை தொடர்வதற்கு மத்திய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் தங்களின் படிப்பை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் ருமேனியா, ஹங்கேரி, போலந்து மற்றும் கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மருத்துவ படிப்பை தொடரும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

External affairs minister speech about medical students


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->