நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரி தொடங்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு! - Seithipunal
Seithipunal


2024ம் கல்வி ஆண்டு வரை தடையை நீட்டித்து உத்தரவிட்டது அகில இந்திய பொறியியல் கவுன்சில்!

தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில், புதிய பொறியியல் கல்லூரியை தொடங்குதற்கான தடையை 2024 வரை நீட்டித்துள்ளது. இருப்பினும், வழக்கமாக வளர்ந்து வரும் கணினி அறிவியல் துறைகளான செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் போன்றவற்றிலும் கூடுதல் இடங்கள் வழங்கப்படும்.

தற்பொழுது அனைத்து கல்லூரிகளிலும் கணினி பொறியியல் பிரிவில் 20 முதல் 30 இடங்களை உயர்த்த கல்லூரிகள் மற்றும் சுயநிதி பல்கலைக்கழகங்களில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே கல்வி நிறுவனங்களில் உள்ள கட்டுமானம் அல்லது பிற முக்கிய பொறியியல் பிரிவில் உள்ள இடங்களை எப்படி உயர்த்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனையில் உள்ளன. இதேபோன்று கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைமுறை செய்ய வேண்டும். 

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வெங்கட் ராவ் கூறுகையில், கணினி அறிவியல் போன்ற ஒரு குறிப்பிட்ட பிரிவில் புதுமையான உயர்கல்வி திட்டங்களை வழங்க வலியுறுத்த வேண்டும். கணிப்பொறி கல்வியில் அதிகமான ஈடுபாட்டால் சிவில், கெமிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற பிற பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து உள்ளது. மேலும் கல்வியின் நோக்கம் அறிவை வளர்க்க வேண்டும் என கூறினார்.

இதனால் அடுத்த கல்வியாண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகள் துவங்க இந்தியா முழுவதும் உள்ள தடையை மத்திய அரசு நீட்டித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Extension of ban imposed on new engineering colleges across the country


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->