சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்: நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ஆந்திரா பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கான தேர்தலும் நடைபெற உள்ளதால் தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரா மாநிலம் மார்க்கபுரம் மற்றும் பாபட்லா தொகுதியில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். 

அப்போது அவர், ஜெகன்மோகன் ரெட்டி ஒரு அரக்கன், திருடன், விலங்கு, மக்களை காட்டிக் கொடுப்பவன் போன்ற சொற்களால் இழிவு படுத்தி பேசினார். 

இது ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். 

அப்போது சந்திரபாபு நாயுடு பேசிய ஆடியோவையும் வழங்கியுள்ளார். அதனை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் சந்திரபாபு நாயுடு நோட்டீஸ் அனுப்பியது. 

மேலும் அதில் அடுத்து 48 மணி நேரத்தில் சந்திரபாபு நாயுடு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commission notice to Chandrababu Naidu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->