டெங்கு : மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சில காலமாக பல்வேறு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், தற்போது டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 4,266 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதுசெய்யப்பட்டு உள்ளதாக காதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 481 ஆக இருந்த டெங்கு பாதிப்பு செப்டம்பர் மாதத்தில் திடீரென அதிகரித்து 572 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.இந்நிலையில்,  வருகிற பருவமழை காலகட்டத்தில் இது மிக தீவிரமாக பரவும் என்பதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

இதைத் தொடர்ந்து, மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு கொசு வலையை பயன்படுத்துதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் சுகாதாரத்துறையால் வழங்கப்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dengu fever increase in tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->