பிரச்சாரத்திற்கான அரசியலா? மாற்றத்திற்கான அரசியலா? - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு..! - Seithipunal
Seithipunal


இன்று டெல்லி மாநிலத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட தேக்கண்ட் பகுதியில் கழிவுகளில் இருந்து எரிசக்தி உற்பத்தி செய்வதற்கான ஆலை தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு, ஆலையை திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் பேசியதாவது, 

"இந்த ஆலையானது நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் மெகா டன் கழிவுபொருட்களை கையாளும் திறன் கொண்டது. இதுமட்டுமல்லாமல், ஆலையில் இருந்து இருபத்தைந்து மெகா வாட்ஸ் பசுமையாற்றலும் உற்பத்தி செய்யப்படும். மேலும், இது ஒரு பன்முக பரிமாணம் மற்றும் பன்னோக்கு ஆலையாக செயல்படும். 

இதையடுத்து, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தினசரி பத்திரிகைகளுக்கு பல்வேறு அறிக்கைகளை தந்து கொண்டிருக்கிறார். மிகவும் பெரிய விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார். பத்திரிகை பேட்டிகள் மாநிலத்திற்கு வளர்ச்சியை கொண்டு வரும் என்று அவர் நினைக்கிறார். விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் மக்களை தவறாக வழி நடத்தி விடலாம் என்று அவர் நினைத்து கொண்டிருக்கிறார். 

ஆம் ஆத்மி கட்சியானது டெல்லியை ஆம் ஆத்மி நிர்பார் ஆக்க விரும்புகிறது. அதேவேளையில் நாங்கள் டெல்லியை ஆத்ம நிர்பார் ஆக்க விரும்புகிறோம். விளம்பரத்திற்கான அரசியலா அல்லது வளர்ச்சிக்கான அரசியலா என்று டெல்லி மக்கள் முடிவு செய்ய வேண்டும். அத்துடன், பிரசாரத்திற்கான அரசியலா அல்லது மாற்றத்திற்கான அரசியலா என்றும் டெல்லி மக்களே முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாதெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi westege to Energy production factory central home minister


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->