வரலாற்றில் முதல் முறையாக தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டைக்கு வரி செலுத்தகோரி நோடீஸ்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 17-ஆம் நூற்றாண்டில் முகலயாய மன்னர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ்க்கு நினைவாக கட்டிய தாஜ்மகால், இன்று வரை முகலாயர்களின் கட்டிட கலைக்கு பெரும் சான்றாக விளங்கி வருகிறது. 

முகலாய மன்னர்கள் தங்கள் தலைநகரை ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு மாற்றுவதற்கு முன்பு, ஆக்ரா கோட்டையில் இருந்தே ஆட்சி புரிந்து வந்தனர். பின்னர் இந்த ஆக்ரா கோட்டை யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

இதனைபார்ப்பதற்கு உலகத்திலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் தாஜ்மகாலுக்கு சுமார் 370 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தக்கோரி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

அந்த நோட்டீசில் 1.9 கோடி நிலுவைத் தொகையை 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று முகலாய மன்னர் அக்பரால் கட்டப்பட்ட ஆக்ரா கோட்டைக்கும் சுமார் ஐந்து கோடி வரி நிலுவைத் தொகை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த நோட்டீஸ் தொடர்பாக இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, "தாஜ்மகால் மற்றும் ஆக்ரா கோட்டைக்கு தவறுதலாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புராதான மற்றும் பாரம்பரிய சின்னங்களுக்கு சொத்து மற்றும் குடிநீர் வரிகள் வசூலிக்கப்படுவதில்லை என்று விளக்கமளித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi muncipality notice to tajmahal and agra fort for water and property tax


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->