பிரபல செய்தி நிறுவனத்திற்கு சிக்கல்! ஆட்டத்தை ஆரம்பித்த அமலாக்கத்துறை! - Seithipunal
Seithipunal


நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்று, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. 

மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கும், அதன் நிறுவனரும், முதன்மை ஆசிரியருமான பிரபீர் புர்கயாஷ்தா பதிலளிக்க கோரி சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.

நடந்தது என்ன? வழக்கு விவரம் :

கடந்த 2021-ம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று செயல்பட்டு வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நியூஸ் கிளிக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

சோதனை எதிரொலியாக தாங்கள் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க, பாதுகாப்புக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் நியூஸ் கிளிக் நிறுவனம் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, நியூஸ்கிளிக் நிறுவனம், பிரபீர் புர்கயாஷ்தா மீது அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார். 

இந்த நிலையில், நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கு சீனாவிடமிருந்து நிதி வருகிறது என்று, அமெரிக்கவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியானது. 

இந்த செய்திக்கு பின், கடந்த இரு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த அமலாக்கத்துறை, நியூஸ்கிளிக் நிறுவனம் மீதான தனது விசாரணையை மீண்டும் தொடங்கி, டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது அமலாக்கத்துறை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi High Court ED raid


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->