ஊபர் காரில் குடும்பத்துடன் சென்ற ஓய்வுபெற்ற காவல் அதிகாரிக்கு கத்திக்குத்து.. கார் ஓட்டுநர் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


வாடகை டாக்சியான ஊபர் காரில் பயணம் செய்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கார் ஓட்டுனரால் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.

டெல்லி காவல்துறை காவல் துறை ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஜிதேந்தர் ராணா. இவர் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி, இரவு 8.30 மணியளவில் டெல்லியில் இருக்கும் ரஜோரி கார்டன் பகுதியில் இருந்து, மால்வியாவில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல ஊபர் கால் டேக்சி புக்கிங் செய்துள்ளார். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் காரில் சென்றுள்ளார். 

கார் ஓட்டுநர் ராஜ்குமார் (வயது 31) என்பவரால் ஊபர் டேக்சி கார் இயக்கப்படும் போது, காரினை அவர் சாலை விதிகளுக்கு முரணாகவும், அதிவேகமாகவும் இயக்கி இருக்கிறார். சாலையோரம் சென்ற வாகனத்தை மோதுவது போன்றும் சென்றுள்ளார். இதனால் அவர் போதையில் இருப்பதை ஜிதேந்தர் உறுதி செய்துள்ளார். 

இவர்களின் கார் நேரு நகர் அருகே சென்றதும், காரின் வேகம் மேலும் அதிகரித்துள்ளது. ஓட்டுனரிடம் காரின் பக்கவாட்டு கண்ணாடியை சரி செய்ய கூறியபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவததால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர், காரினை நிறுத்தி அனைவரையும் கீழே இறக்கிவிட்டுள்ளார். 

பின்னர், காரின் பின்புறம் இருந்த கத்தியை எடுத்துவந்து ஓய்வுபெற்ற காவல் அதிகாரியின் வயிற்றில் குத்தியிருக்கிறார். அருகே இருந்த ஜிதேந்தரின் மனைவி மற்றும் மகள் உதவி கேட்டு கதறியழ, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஓட்டுனரை அடித்து நொறுக்கியுள்ளனர். பின்னர், ஜிதேந்தர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். மேலும், ஊபர் நிறுவனமும் விஷயத்திற்கு மன்னிப்பு கேட்டு, ஓட்டுனரை பணியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. காவல் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் உறுதி அளித்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Ex Police Service Man Murder Attempt by Uber Car Driver


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->