பாலியல் புகார் - எய்ம்ஸ் மருத்துவருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்.! - Seithipunal
Seithipunal


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியராக பணியாற்றி வருபவர் டாக்டர் தீபக் குப்தா. இவர் மீது டெல்லி ஹவுஸ் காஸ் காவல் நிலையத்தில் பெண் மருத்துவர் ஒருவர் புகார் அளித்துள்ளார். 

அந்தப் புகாரில், தீபக் குப்தா தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் கர்ப்பமானதாகவும், அந்த கருவை கலைக்குமாறு தீபக் குப்தா வற்புறுத்தியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த புகாரின் அடிப்படையில் தீபக் குப்தா மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி விஜயஸ்ரீ ரத்தோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதி, வரும் பிப்ரவரி மாதம் 26-ந்தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் தீபக் குப்தாவிற்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi court summon send to aiims doctor


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->