என்னை தூக்கிலிடுங்கள் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொந்தளிப்பு! - Seithipunal
Seithipunal


மதுபான விற்பனைக்கான உரிமங்கள் வழங்கிய ஊழல் வழக்கில், என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்னை தூக்கிலிடுங்கள் என்று, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்ஆவேசமாக பேசியிருக்கிறார்.

டெல்லி மதுபான விற்பனைக்கான உரிமங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில், சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் ஏற்கனவே டெல்லி துணை முதலமைச்சராக இருந்த சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், தெலுங்கானா மாநில முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் 50 மருத்துவ கிளினிக்குகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது, "எனக்கு எதிராக சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கு ஒரே காரணம் தான் நான். ஒரு திருடன் என நிரூபிக்க வேண்டும். நான் இந்த நேரத்தில் பிரதமர் மோடிக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

பிரதமர் மோடி அவர்களே! அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல்வாதி என்றால், இந்த உலகத்தில் யாருமே நேர்மையானவர்கள் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஒரு பைசா ஊழலை நீங்கள் நிரூபித்தால், அதே நாளில் என்னை பொதுவெளியில் வைத்து தூக்கிடுங்கள் என்பதை நான் தெரிவிக்க விரும்பிக் கொள்கிறேன். அதற்கு முன்பாக இந்த சோதனை நாடகங்களை நிறுத்தி வையுங்கள்" என்று  அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசமாக பேசினார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi CM Aravind Say About CBI IT ED raid


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->