10 நாட்களில் மொத்த இந்தியாவிலும் தடுப்பூசி விநியோகம் - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனாவின் தாக்கத்தை கட்டுக்குள் வைக்க, தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் உலக நாடுகள் ஈடுபட்டு வந்தது. தற்போது பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்களின் பொதுப்பயன்பாடு விநியோகத்திற்கு வந்துள்ளது. இந்தியாவிலும் பாரத் பயோடெக் நிறுவனம் சார்பாக கோவேக்சின் என்ற இந்திய தயாரிப்பு தடுப்பூசியும், ஷீரம் இன்ஸ்டியூட் மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியான கோவேக்சின் தடுப்பூசியும் விநியோகத்திற்கு தயாராக உள்ளது.  

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு தயாராக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் நான்கு இடங்களில் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு மையங்கள் நிறுவப்பட இருக்கிறது.

சென்னை, கர்னூல், மும்பை, கொல்கத்தாவில் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு மையங்கள் அமையவுள்ளது. ஜனவரி மாதம் 13 ஆம் தேதியில் இருந்து நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்க வாய்ப்பு உள்ளது. முதற்கட்டமாக கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி மருந்து செலுத்தப்படும். கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி ஒத்திகைகள் வெற்றிகரமாக நிறைவடடந்துள்ளதால், அடுத்தகட்ட பணிகள் துவங்கியுள்ளது " என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக கோவேக்சின், கோவிட்ஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை பொதுவிநியோகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona Vaccine India Ready to Distribute Over All India within 10 Days


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->