#கர்நாடகா தேர்தல்: பாஜகவின் போட்டியை சமாளிக்க காங்கிரஸ் புதிய வியூகம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. 

இந்நிலையில் மூன்று கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், பாஜக கடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைப் போலவே, முஸ்லிம், கிறிஸ்துவர் போன்ற சிறுபான்மையின வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்காது என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர். 

இதைத்தொடர்ந்து, இந்துக்களின் வாக்குகளை பெரும் வகையில் 224 தொகுதிகளிலும் இந்து வேட்பாளர்களை களமிறக்க இருப்பதாக‌ தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பாஜகவின் போட்டியை சமாளிக்க காங்கிரஸ் தனது வியூகத்தை மாற்றியுள்ளது. முஸ்லிம், கிறிஸ்துவர் உள்ளிட்ட சிறுபான்மையின வேட்பாளர்களுக்கு எத்தனை சீட் வழங்குவது என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

இதில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளைப் பெற முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress new strategy to deal with BJP competition in Karnataka election 2023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->