மல்யுத்த வீரர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலில் பாஜக எம்பி-யும், டபிள்யூஎப்ஐ முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் ஆதரவாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு மல்யுத்த வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா, ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்சி மாலிக், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகத் உள்ளிட்டோர் பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன் தங்களது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாகவும் அறிவித்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஹரியாணா மாநிலம் சாரா கிராமத்தில் உள்ள வீரேந்தர் ஆர்யா அகாரா கூடத்துக்கு இன்று காலை வந்து, அங்கிருந்த தீபக் பூனியா, பஜ்ரங் பூனியா உள்ளிட்ட முன்னணி மல்யுத்த வீரர்களை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து, பஜ்ரங் பூனியா, “எங்களது வழக்கமான பயிற்சிகளைப் பார்வையிட ராகுல் காந்தி வந்தார்" என்று தெரிவித்தார். மல்யுத்த சம்மேளனத்துக்கு எதிராக வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ராகுல் காந்தி அவர்களைச் சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass leader meet wrestlers in hariyana


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->