ஆந்திராவில் பரிதாபம் : யூடியூப் பார்த்து கருக்கலைப்பு செய்த கல்லூரி மாணவி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் பரிதாபம் : யூடியூப் பார்த்து கருக்கலைப்பு செய்த கல்லூரி மாணவி உயிரிழப்பு.!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் மரிபாடு மண்டலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நெல்லூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். தற்போது இந்த மாணவி ஆறு மாத கர்ப்பமாக இருந்துள்ளார். 

இது குறித்த தகவல் யாருக்கும் தெரியாது. இந்த நிலையில், அந்த மாணவி வழக்கம் போல் கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது வகுப்பு இடைவேளையின் போது சக மாணவிகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்கு சென்றனர். ஆனால், இந்த மாணவி மட்டும் வகுப்பறையில் தனியாக இருந்துள்ளார். 

நீண்ட நேரமாகியும் மாணவி விளையாட வராததால், அவரை அழைப்பதற்காக அவரது நண்பர்கள் வகுப்பறைக்கு வந்தனர். அப்போது கதவு மூடிக்கிடந்தது. இதைப்பார்த்த அவர்கள் கதவை தட்டியும் கதவு திறக்கவில்லை. 

இதனால் சந்தேகமடைந்த மாணவர்கள் கதவை உடைத்து உள்ளேச் சென்று பார்த்த போது மாணவி அதிக ரத்தப்போக்குடன் மயங்கிக் கிடந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், மாணவியின் பக்கத்தில் ஆறு மாத குழந்தை ஒன்று கிடந்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அந்த மாணவியையும் கருவையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை சார்பில் போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மருத்துவர்களிடம் இருந்து விவரங்களை சேகரித்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அதில், மாணவி கல்லூரி வகுப்பறையில் யூடியூப் வீடியோ பார்த்தபடி கருக்கலைப்பு செய்ததும், அந்த நேரத்தில் ரத்தபோக்கு ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என்பதும் தெரிய வந்தது. மனைவி ஒருவர் யூடியூப் பார்த்து கருகலைத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student died for aborted after vedio watching in you tube


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->