தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேரளாவில் அதிரடி வரவேற்ப்பு..! - Seithipunal
Seithipunal


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று முதல் இந்த மாதம் 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, 'கூட்டாட்சி மற்றும் மத்திய-மாநில உறவு" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. 

இந்த கருத்தரங்கில் கலந்துக் கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். திருவனந்தபுரத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் கேரள மாநில வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறை மந்திரி கே.ராஜன் சால்வை அணிவித்து வரவேற்றனர். 

இவருடன் கேரள மாநில உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜி.ஆர்.அணில், தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். 

அந்த கருத்தரங்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் முக்கிய உரை ஆற்ற இருக்கின்றனர். எனவே கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister mk stalin going to kerala


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->