இந்திய ராணுவ தலைமையில் நடந்த அதிரடி மாற்றம்.!  - Seithipunal
Seithipunal


இந்திய ராணுவத்தின் 28-ஆவது தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நரவானே இன்று பொறுப்பேற்றார்.

ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் புதிதாக உருவாக்கப்பட்ட முப்படைகளுக்கு இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், ராணுவ துணைத் தளபதியான முகுந்த் நரவானே அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இது வரையில், நரவானே, சீனாவுடனான இந்திய எல்லையை பாதுகாக்கும் இந்திய ராணுவத்தின் கிழக்கு படைப் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தார். தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமி உள்ளிட்டவற்றில் பயிற்சியை முடித்த அவர், கடந்த 1980-ஆம் ஆண்டு சீக்கிய காலாட் படையில் இணைந்து தனது ராணுவப் பணியை தொடங்கினார்.

இந்திய ராணுவத்தில் கடந்த 37 ஆண்டுகளாக ராணுவ பணியில் இருந்து வரும் நரவானே, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியை கட்டுப்படுத்துவது, அங்கு அமைதியான நடவடிக்கைகளை கொள்வது. அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சிறப்பாகப் பணியாற்றினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

changes in indian army


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->