விபத்தில் சிக்கிய மத்திய அமைச்சர்! தற்போதைய நிலை என்ன!?  - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் கர்நாடகா மாநிலம் அங்கோலா பகுதியில் கார் விபத்துக்குள்ளாகி மத்திய ஆயூஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் காயம் அடைந்தார். அவர் தற்போது கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தற்போதைய மத்திய அமைச்சரவையில் ஆயுஷ் அமைச்சராக இருப்பவர் ஸ்ரீபாத் யெசோ நாயக். அவர் பயணம் செய்த வாகனம் கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் அங்கோலா அருகே விபத்துக்குள்ளானது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய ஆயுஷ் அமைச்சர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் அமைச்சரின் மனைவி விஜயா ஸ்ரீபாத் நாயக் மற்றும் அவரது உதவியாளர்  இறந்துவிட்டனர். 

இந்த நிலையில் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவருடைய உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் இரத்த அழுத்தம் சாதாரணமாக உள்ளது.  சிறுநீர் மற்றும் இரத்த அளவுருக்கள் இயல்பாக உள்ளன. எய்ம்ஸ் குழு ஜி.எம்.சி மருத்துவர்களுடன் தொடர்ந்து அவரது முன்னேற்றத்தைக் கண்காணித்து வருவதாகவும், அவரை டெல்லிக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central Minister shribad naik health condition


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->