#Breaking: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இவைகளை, மே 15 வரை மூட மத்திய அரசு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 138,843,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வைரசால் 2,985,676 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 111,617,948 பேர் குணமடைந்துள்ளனர்.  சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் பிரேசிலில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,40,74,564 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,24,29,564 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் புராதன சின்னங்களை மே மாதம் 15 ஆம் தேதி வரை மூடுவதற்கும், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அருங்காட்சியகத்தை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Order Close Ancient symbols and Museum Banned till 15 May 2021 In India due to Corona Second Wave


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->