எல்லையோர கிராமத்தினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்க மத்திய அரசு முடிவு..!! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் ரஜவுரி மாவட்டத்தின் டாங்கிரி கிராமத்தில் அண்மையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லையோர கிராமத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்க பாதுகாப்பு படையினருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராம பாதுகாப்பு படை என்ற அமைப்பை உருவாக்க பாதுகாப்பு படையினர் முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் ஆர்வமும் தகுதியும் உள்ள கிராம இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து வருகின்றனர்.

குறிப்பாக ரியாஸ் என்ற மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியை முடித்த இளைஞர்கள் எல்லையோர கிராமங்களுக்கு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt decided to provide shooting training to border villagers


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->