தமிழகத்தின் 6 மாவட்டங்கள் உட்பட 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா.? மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அதி வேகத்தில் பரவிவருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனுடைய நாடு முழுவதும் 10 சதவீதத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு உள்ளதாக சுமார் 150 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 

இதில் தமிழகத்தில் 6 மாவட்டங்கள் இந்த பட்டியல் இடம்பெற்றுள்ளது. இந்த மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தினால் இரண்டாவது அலையை தடுத்து நிறுத்தி விடலாம் என மத்திய அரசு கருதுகிறது. இதுகுறித்து கடந்த சில நாட்களாக மத்திய அரசு மாநில அரசுகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு கொண்டு வரப்படலாம் என கடந்த இரண்டு நாட்களாக தகவல் வெளியானது. 

ஆனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாவிட்டால் முன்புபோல் பச்சை, சிவப்பு, மஞ்சள் என மூன்று மண்டலகளாக மாவட்டங்களைப் பிரித்து அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலங்களுக்கு நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வந்துள்ளது. 10 சதவீதத்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு பதிலாக கூடுதல் கட்டுப்பாடுகளை கொண்டு வந்து, அதை தீவிரமாக அமுல் படுத்தினால் போதும் என தெரிவித்தனர். கடந்த ஒரே வாரத்தில் மாவட்டங்களில் கொரோனா பரவலாக எந்த அளவுக்கு உள்ளது என்பதை ஆய்வு செய்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt advice do not full lockdown


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->