புத்தர் இந்தியனா? நேபாளியா?! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வாய்த்த இந்தியா! - Seithipunal
Seithipunal


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் புத்தர் குறித்து கூறிய கருத்தால் சர்ச்சை எதுவும் இல்லை என்று இந்தியா அறிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை நடந்த இணைய வழி கூட்டத்தின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள், "காந்தி மற்றும் புத்தரின் போதனைகள் இன்றும் நாம் கடைப்பிடிக்க கூடியவையாக உள்ளது" என்று தெரிவித்து இருந்தார்.

இதனை நேபாள செய்தி ஊடகங்கள், 'இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் புத்தர் இந்தியாவில் பிறந்தவர்' என கருத்து கூறியதாக செய்திகள் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், இந்த பொய்யான செய்திகள் குறித்து வெளியுறவு துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், "நேபாளத்திலுள்ள லும்பினியில் தான் புத்தர் பிறந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கிமு 5 மற்றும் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்தரின் காலத்தில் நேபாளம் என்ற தனி நாடு இல்லை. நவீன பீகாரில் உள்ள புத்த கயாவில் ஞானம் பெற்ற பிறகே சித்தார்த்தர், கவுதம புத்தர் ஆனார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் புத்தர் குறித்து கூறிய கருத்தால் சர்ச்சை எதுவும் இல்லை" என்றும் அந்த செய்தி குறிப்பில் விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

buddha birth place issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->