உ.பி: வாரணாசியில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் வாரணாசியில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இன்று காலை 07.30 மணியளவில் 34 பேருடன் சென்ற படகு கங்கை ஆற்றில் கெடாகாட் அருகே சென்று கொண்டிருந்த போது கங்கை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் அப்பகுதியில் இருந்த உள்ளூர் மாலுமிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து படகில் இருந்த 34 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மேலும் இந்த விபத்தில் சிக்கிய ஒரு பெண் உட்பட இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் இருவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  

இந்த விபத்தானது படகில் அதிக பாரம் ஏற்றப்பட்டது காரணம் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boat capsizes in river Ganga in varanasi uttarpradesh


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal