கோட்சேவை தேச தந்தை என அழைத்த பாஜக வேட்பாளர்? பாஜக தலைமையே அந்த வேட்பாளரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக  வேட்பாளர் பிரக்யா சிங் தாகுரிடம், கமல்ஹாசன் கோட்சே குறித்து பேசிய சர்ச்சை பேச்சு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அந்த கேள்விக்குக்கு பதிலளித்த பிரக்யா, கோட்சே ஒரு தேசபக்தர். அவர் அப்போது மட்டுமல்ல, இப்போதும், எப்போதும் தேச பக்தர் தான், கோட்சேவை தீவிரவாதி என்று அழைத்தவர்களை மக்கள் தேர்தலில் நிச்சயம் தோற்கடிப்பார்கள் என தெரிவித்தார். பிரக்யாவின் இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

பிரக்யாவின் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா,  தேசத் தந்தை காந்தியை கொலை செய்தவர்களை பா.ஜ.க தலைவர்கள் உண்மையான தேசபக்தர் என்று அழைக்கின்றனர். நாட்டுக்காக உயிர் நீத்த ஹேமன்ட் கர்கரே போன்றவர்களை தேச விரோதி என்கின்றனர் என பாஜகவினரை கடுமையாக விமர்சித்தார்.

இதனையடுத்து பிரக்யா தாகுரின் பேச்சுக்கு பாஜகவும் கடும் கண்டனம் தெரிவித்தது. கோட்சே குறித்து பேசியதற்கு பிரக்யா பொதுவெளியில் மன்னிப்பு கோரவேண்டும் என பாஜக வலியுறுத்தியது. இதனையடுத்து கோட்சே குறித்து பேசியதற்கு பிரக்யா சிங் தாகுர் பகிரங்க மன்னிப்பு கோரினர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp candidate say sorry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->