ஜாம் நகர் வடக்கு தொகுதியில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி போட்டி! வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

வாக்குப்பதிவு நடக்க இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் மொத்தமுள்ள 182 சட்டமன்ற தொகுதிகளில் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இதில் குஜராத் மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பூபேந்தர் பட்டேல் கட்லோடியா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோன்று இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவிற்கு சென்ற ஹர்திக் பட்டேல் விரம்கம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். 

குஜராத் தேர்தல் களத்தைப் பொறுத்தவரை முனை போட்டியில் விளைவு வருகிறது. முதன்முறையாக குஜராத் தேர்தல் காலத்தில் இறங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சி பாஜகவிற்கு கடும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் "இந்த முறை பாஜகவுக்கும் காங்கிரஸ்க்கும் அதிர்ச்சி வைத்தியம் அளிப்போம்" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP announced candidates for Gujarat elections


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->